சிதம்பரத்தில் பண மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது.! போலி ஆவணம் தயாரித்து அரசு வேலைவாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் கொள்ளை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தினசரி தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் வருகின்றன. மேலும், சிட்பண்ட்ஸ், பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் மூலமாக பொதுமக்களுக்கு ஆசை காட்டி கொள்ளையடித்தது மோசடி செய்தது போக இணையதளம் மூலமாகவும் பல்வேறு மோசடிகளை செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், சிதம்பரத்தில் ஒரு பெண் போலி ஆவணம் தயாரித்து அரசு வேலைவாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த உளுந்தூர் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் இளந்தீபன். இவர் இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அறிமுகமான சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா என்பவர், இளந்தீபனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஷோபியா கூறியதை உண்மை என்று நம்பி இளந்தீபன், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்த நிலையில், அவர் ஒரு பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்து பணியில் சேர கூறினார். அந்த ஆணையுடன் இந்திய உணவு கழக அலுவலகத்திற்கு சென்று, இளந்தீபன் பணியில் சேர வேண்டும் என்று கூறினார். அந்த ஆணை போலியானது என அங்குள்ள அதிகாரிகள் கூறினர்.

மேலும், இதுகுறித்து இளந்தீபன் சிதம்பரம் காவல்நிலையத்தில், அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஷோபியாவும், அவரது தாய் ஆரோக்யசெல்வியும், வேலை வாங்கி தருவதாக சிதம்பரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி, கடலூர் சொரக்கால்பட்டில் கணினி மையம் நடத்தி வரும் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, சிதம்பரம் காவல்துறையினர், சிலுவைபுரத்தில் முகாமிட்டு ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கைது செய்தனர். காவல்துறையினர் கண்காணிப்பதை அறிந்த முக்கிய குற்றவாளியான ஷோபியா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money cheating in chidambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->