ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை.., மருத்துவர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வாரம் எம்எல்ஏ.,வாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நேற்று இரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தினையே இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மருத்துவர் தெரிவித்தாவது, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma Subramanian say about EVKS Elangovan health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->