கண் பிரச்சனையை தீர்க்கும் 'பொன்னாங்கண்ணி சூப்' ஒரு முறை செய்து குடித்து பாருங்க.!  - Seithipunal
Seithipunal


கண்கள் மற்றும் தோலை பளபளப்பாகும் பொன்னாங்கண்ணி சூப் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
பொன்னாங்கண்ணி 
மிளகு 
உப்பு 
இஞ்சி 

செய்முறை: 
இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிளகை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை போட்டு நன்றாக வேக வைக்கவும். 

கீரை வெந்தவுடன் துருவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக பொன்னாங்கண்ணி கீரை வெந்து கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

அவ்வளவுதான் சுவையான பொன்னாங்கண்ணி சூப் தயார். இந்த சூப் கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்று கண்களை எடுத்துக் காட்டவும் பயன்படுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும் இது மிகவும் உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponnankanni soup recipe tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->