பெரியபாளையம் அருகே பரபரப்பு.! மணல் அள்ள மக்கள் எதிர்ப்பு.!!  லாரிகளை சிறை பிடித்து போராட்டம்!!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள கன்னிகைப்போர்  குவாரி நடந்து சவுடு மண் எடுப்பதற்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாவட்ட நிர்வாகம் அந்த கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் கிராம மக்கள் அதனை ஏற்கவில்லை. அதை தொடர்ந்து அந்த ஏரியில் மணல் அள்ளுவதற்காக 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்தன. மொத்தமாக லாரிகள் வருவதை பார்த்த அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டனர்.

மேலும், ஒன்று சேர்ந்த மக்கள் அனைவரும் கூட்டமாக, மணல் அள்ளுவதற்காக ஏரிக்கு   வந்துகொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனர். அது மட்டுமின்றி மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்களையும் எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

இதுகுறித்து, தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மணல் குவாரியை நடத்த கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorrys arrested to public protest against sand quarry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->