கரூரில் முக்கிய புள்ளியின் வீட்டில் திடீர் ரெய்டு! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட திட்ட அலுவலருடன் தொடர்பில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் இன்று சோதனை நடத்தினர்.

கரூர் மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரக திட்ட இயக்குநரக அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மூக்கையா. 

தற்போது பணிமாறுதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மூக்கையா வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாகவும், லஞ்சம் லோஷன் செய்துள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினருக்கு ராசியாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், முக்கையாவுக்கு தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மூக்கையாவுடன் தொடர்பில் இருந்த  கரூர், காணியாளம்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Anti corruption Raid 27092023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->