தஞ்சை மண்ணை.. பொன்னாக்க.. இன்று கல்லணையில் இருந்து அன்னை காவேரி ஆர்ப்பரித்து வர போகிறாள்.! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் (19.07.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். அப்போது, 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் அன்று இரவு முதல் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

நீர் வெளியேற்றும் அளவை கர்நாடகம் குறைத்து விட்டாலும், இன்னமும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. கபினி அணையில் இருந்து 35,625 ஆயிரம் கன அடியாகவும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114 அடியாகவும், மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 66 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் அணை, தன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் தற்போது 87 டிஎம்சி  நீர் உள்ள நிலையில், பாசனத்துக்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர், நேற்று காலை 11 மணி அளவில் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மலர் மற்றும் நெல்மணிகளை ஆற்றில் தூவி, வரவேற்றனர். காவிரி நீர் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வளர்மதி உள்ளிட்டோர் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணி திறந்து விடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallanai dam today open


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->