மனைவியை கருப்பாக இருக்கிறாய் என்று கூறி தற்கொலைக்கு தூண்டிய கணவர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மனைவியை கருப்பாக இருக்கிறாய் என்று கூறி தற்கொலைக்கு தூண்டிய  கணவர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆடீஸ் வீதியை சேர்ந்தவர்கள் கணேஷ்குமார்-மாரிச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் மாரிச்செல்வி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டார். 

திருமணமான ஒரு மாதத்திற்குள்ளேயே புதுமணப் பெண் மாரிச்செல்வி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில், மாாிச்செல்வி கருப்பாக இருப்பதாக கூறி கணவர் கணேஷ்குமார் அடிக்கடி மன ரீதியாக தொந்தரவு செய்து வந்ததும், இதனால் மனமுடைந்த மாாிச்செல்வி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேஷ்குமார் வீட்டில் சோதனை நடத்தியதில் மாரிச்செல்வி எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்தக் கடிதத்தில் மாரிச்செல்வி, "தனது மாமனார், மாமியார் நல்லவர்கள் என்றும், என்னால் கணவருடன் வாழ முடியாது என்றும், பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார், மாரிச்செல்வியை தற்கொலைக்குத் தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். 

மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கணேஷ்குமாருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jail penalty to man for pushed wife to commit sucide in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->