கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த இந்திய கம்யூ. நகர செயலர்: நொடியில் நேர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நகரச் செயலாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.   

இந்நிலையில் தர்மபுரி, பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 30 மேற்பட்டோர் பேரணியாக சென்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நகர செயலாளர் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் பழங்குடி இன மக்கள் சங்கத்தின் சிறப்பு தலைவருமான நஞ்சப்பன் பங்கேற்றார். மேலும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

அப்போது நகரச் செயலாளர் பாரதி திடீரென மயக்கம் அடைந்துள்ளார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்சியினர் உடனடியாக அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் பாரதிக்கு மாரடைப்பு ஏற்பதாக தெரிவித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Communist Party protest City Secretary died 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->