குட்டிஸ்களுக்கு பிடித்த பிரெட் வடை செய்வது எப்படி?! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு
ரவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி எடுத்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும். 

பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare bread vada


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->