அடைப்பு, நெஞ்சுவலி, ஆப்ரேஷன் - நேரில் சென்று நலம் விசாரித்த ஆளுநர்! - Seithipunal
Seithipunal


பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான எச் ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிரீன் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச் ராஜா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் உடல்நலையை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து எச். ராஜாவுக்கு இன்று காலை காலையில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் எச் ராஜாவின் ஏற்பட்டுள்ள ரத்த அடைப்புகளை சரி செய்து, ஸ்டாண்ட் வைக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச். ராஜாவை நேரில் சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja in hospital health issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->