ஸ்டாலினுக்கு இவ்வளவு என்றால் எனக்கு எவ்வளவு இருக்கும்!! ஆவேசமான பேச்சால் பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 16ஆம் தேதி நாளையுடன் தமிழகத்தில்  பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் இன்று மற்றும் நாளை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் தமிழக கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து பேசினார்.

அப்போது அவர், "மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அவருடைய சொந்த ஊரான சிவகங்கையில் கூட மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்ததை யாருமே ஏற்கவில்லை. மேலும், வேற எந்த கூட்டணி கட்சியினருமே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்த பிறகு ராகுலுக்கு இருந்த ஆதரவு குறைந்து தான் இருக்கின்றது.

கருணாநிதியின் மகன் என்ற தகுதியுடன் அரசியலுக்கு வந்த உங்களுக்கு, இவ்வளவு இருக்கும் என்றால் உழைத்து உயர்ந்த அரசியலுக்கு வந்து பதவிக்கு வந்த எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? என பேசியுள்ளார். இதற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy speech in krishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->