கபாடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்காக ஒலித்த முதல் குரல்!  அரசு வேலை வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


கபாடிப்போட்டியின் போது உயிரிழந்த வீரருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபாடி போட்டியின் போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமல்ராஜ் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கபாடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார்.  அவரது எதிர்பாராத மறைவால்  அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது. 

விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!" என வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss tweet about kabaadi player vimalraj death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->