நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதைமுன்னிட்டு மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன் படி அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுவர்களில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலறிந்த பொய்கை கிராம நிர்வாக அலுவலர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file about mansoor alikhan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->