சந்தானத்தின் " இங்க நான்தான் கிங்கு " பட ட்ரைலர் வெளியானது.!! - Seithipunal
Seithipunal


மன்மதன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார் சந்தானம். அஜித், விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகனாக பணியாற்றி தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் சந்தானம்.

இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அறிவித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டு ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்கள்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் " இங்க நான்தான் கிங்கு " .இப்படத்திற்கு அரவிந்தன் என்பவர் கதை,திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இப்புதிரைப்படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா , முனிஷ்காந்த் உள்ளிட்டபலரும் நடித்துள்ளனர்.கடந்த மாதம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கமலஹாசன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து இங்க நான்தான் கிங்கு படத்தின் ட்ரைலர் இன்று மாலை 4.50 மணிக்கு யூடூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam movie inga nanthan kingu trailer realese


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->