"உங்கள் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும்" கேப்டனுக்கு வினோஜ் பி.செல்வம் புகழ் அஞ்சலி! - Seithipunal
Seithipunal


மறைந்த தேமுதிக தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில், பாஜகவின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் வினோஜ் பி.செல்வம் மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். 

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாட்டின் பிரதமர் முதல் அரசியல்கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அவரின் நினைவிடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்களும், திரைபிரபலன்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

iதேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பிரேமலதா விஜயகாந்தும் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அவருக்கும் ஆறுதல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்த அவரின் எக்ஸ் சமூக வலைத்தள பக்க பதிவில், "பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா பிரேமலதா விஜயகாந்த் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிய உங்கள் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும் கேப்டன்" என்று வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். 

அண்மையில் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vinoj P Selvam Tribute to Captain Vijayakanth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->