அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்! நானே தாயாகிறேன் - கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், தும்கூர் டவுன் பாரதியார் நகரில் வாடகை வீட்டில் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி. அண்மையில் கணவர் உயிரிழந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணி பெண்ணான கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, தும்கூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அப்போது, பணியில் இருந்த டாக்டர் உஷா என்பவர் கஸ்தூரியின் தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால், பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆனால், கஸ்தூரி மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்ற போது, வீட்டிலேயே அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கஸ்தூரி உயிரிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்தன.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் திரைப்பட நடிகையும், சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "ஒரு உயிரைக் காப்பாற்ற ஆதார் அட்டை தேவையா? மருத்துவமனைகள் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும், அவை சட்டத்தை நிலைநிறுத்த நீதிமன்றம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் யாரும் விதிகளை மீறுவதில்லை இல்லையா? நோயாளிகளிடம் பணம் பறிப்பதில்லையா? உண்மை என்னவெனில் ஆதார் அட்டைக்கு பதில் கிரெடிட் கார்டு இருந்திருந்தால் சிகிச்சை கிடைத்திருக்கும்.

இது மருத்துவர்களுக்கு அவமானம். ஒட்டுமொத்த அமைப்புக்கும் அவமானம். கர்நாடக பாஜக அரசுக்கு அவமானம். சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எப்படி இரவில் தூங்குகிறார் என்று புரியவில்லை. இந்த மூன்று கொலைகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் அவர். 

தமிழ் பெண் கஸ்தூரியின் ஆறு வயது பெண் குழந்தை ஒன்றும் தற்போது அனாதையாகி அரசின் தயவில் உள்ளது. அந்த குழந்தையை அனைத்து வசதிகளுடனும், உதவிகளுடனும் வளர்க்க வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. 

மீண்டும், நாம் அனைவரும் யதார்த்தத்தை அறிவோம்.  இன்னும் சில நாட்களில், மீடியாக்கள் அடுத்த பிரேக்கிங் ஸ்டோரிக்கு நகரும், அரசியல்வாதிகள் தங்கள் விவாதங்களுக்கு திரும்புவார்கள், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை சுரண்டுவதற்கு திரும்புவார்கள், அந்த குழந்தை மறந்துவிடும்.

எங்களூரில் பிரசவத்துக்கு இலவசம் என்று ஆட்டோக்காரர் கூட கற்றுக்கொடுப்பார். பெங்களூரில் அந்த மனிதாபிமானம் எங்கே?

மூன்று உயிரை குடித்த மூதேவிகள்! 

கர்ப்பிணியை காவு வாங்கியது ஆசுபத்திரி அட்டைக்காகவா இல்லை காசு பிடுங்க முடியவில்லை என்பதாலா?

ஒரு தாயாக, தமிழ் பெண்ணாக இங்கு இந்த கஸ்தூரியும் கொஞ்சம் இறந்தாள்.  அனுமதி கொடுத்தால் கஸ்தூரியின் ஆறு வயது மகளை என் மகளாய் வளர்க்க தயாராக உள்ளேன்." என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACTRESS KASTURI SAY ABOUT KARNATAKA INCIDENT


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->