ஒரே போட்டியில் 3 உலக சாதனைகளை அடித்து நொறுக்கிய "ரோஹித் ஷர்மா"..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலக கோப்பையின் கடைசி லீப் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோன்று அவருடன் களமிறங்கிய சுப்மன் கில் 32 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். அவர் தனது பங்கிற்கு 4 சிக்ஸர்கள், 3 பவுண்டர்களை குவித்தார்.

இந்த போட்டியில் 61 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் ஷர்மா 3 உலக சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச போட்டியில் தொடக்க வீரராக 14,000 ரன்கள் கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 

அதேபோன்று ஒரே உலகக்கோப்பையில் கேப்டன் நடித்த அதிக சிக்ஸர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 23 சிக்சர்களை விளாசி உள்ளார். 

அதேபோன்று ஒரு நாள் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடுத்தவர் பட்டியலில் ரோகித் சர்மா முதல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நடப்பாண்டில் தற்போது வரை 59 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.பி டிவில்லியர்ஸ் ஒரு ஆண்டில் 58 சிக்சர் அடித்தது சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma create 3 world record in single match


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->