இன்றைய இந்திய-நியூசிலாந்து டி20 போட்டியில் டோனி அடித்த ட்ரிபிள் செஞ்சுரி அடித்து சாதனை.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில்  இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தால், 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதனைஅடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் ஊரிலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

ரிஷப் பண்ட் வந்த வேகத்தில்12 பந்துக்கு 28 ரன்களை ஆடிவிட்டு நடையை காட்டினார். அதன் பின்  ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது. பின் தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியின் வெற்றிக்காக போராடினர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்து, வெறும் 4 ரங்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இந்த போட்டி எம்.எஸ் தோனிக்கு 300 வது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் 300 டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றையும் தோனி படைத்துள்ளார். இதுவரை தோனி பங்கேற்ற டி20 போட்டிகளில் 6134 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடித்துள்ளார்.

தோனியை தொடர்ந்து 298 போட்டிகள் பங்கேற்ற ரோஹித் சர்மா 2வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளில் பங்கேற்று 3வது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 260 போட்டிகளில் பங்கேற்று 4வது இடத்திலும் உள்ளார்.

English Summary

MS DHONI NEW RECORD


கருத்துக் கணிப்பு

இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?கருத்துக் கணிப்பு

இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
Seithipunal