#INDvsWI || பெரும் பின்னடைவு.!! ஒருநாள் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்!! காரணம் இதுதான்? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.  இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதுக்கிடையே இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சிராஜிக்கு கணுக்காலில் வலி ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ மருத்துவக் குழு ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளதால் மாற்று வீரரை இந்திய அணி அழைக்கவில்லை.

இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாகூர், அக்சர் படேல் , யுஸ்வேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , ஜெய்தேவ் உனத்கட் , உம்ரான் மாலிக் , முகேஷ் குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammad Siraj ruled out ODI series against WI due to injury


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->