வெறுத்துப்போன கிரிக்கெட் வாரியம்! எடுத்த அதிரடி முடிவு! புதிய பரிசோதனைக்கு ஆளான இந்திய அணி!  - Seithipunal
Seithipunal


இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அணியும், பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1-1 சமநிலையில் இருக்கிறது. 

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த 3 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதனத்தில ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆடக்கூடிய இந்திய அணியினை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.  தொடர்ந்து சொதப்பி வரும் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், முரளி விஜயை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால் அறிமுகமாக, மிடில் ஆர்டரில் ஆடிய அனுமான் விஹாரி தொடக்க வீரராக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.  

கடந்த போட்டியில் சொதப்பிய உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். ராகுல், விஜய்க்கு பதிலாக ரோஹித், அகர்வால் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரகானே, மயங்க் அகர்வால், ஹனுமான் விஹாரி, புஜாரா, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, இஷாந்த் சர்மா, பும்ரா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார்கள்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket team change the opening pair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->