WI எதிராக 100வது டெஸ்ட்.. விராட் கோலியின் 500வது போட்டி! தொடரை கைப்பாற்றுமா இந்திய அணி!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அன்னைக்கு எதிராக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்த இந்த போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டி இன்று குயின் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதேபோன்று விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன்(விக்கெட்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிரெய்க் பிராத்வைட்(கேப்டன்), டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா(விக்கெட்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல் ஆகியோர் கிளமிறங்குகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India batting in 2nd Test against the West Indies


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->