வெற்றியுடன் தொடங்குமா இந்தியா.? இந்தியா-தென்னாபிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் விளையாடி ய 2 டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் முதன் முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

டி20 தொடரில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், 35 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் முடிவில்லை.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கே), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன்(வி.கீ), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ், ராகுல் திரிபாதி, முகேஷ் குமார், ருதுராஜ் கெய்க்வாட், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய்

ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி: 

ஜன்னெமன் மலான், குயின்டன் டி காக்(வி.கீ), டெம்பா பவுமா(கே), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி, ரீசா ஹென்ட்ரிக்ஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA 1st ODI match today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->