மரண மாஸ் காட்டிய தினேஷ் கார்த்திக்! சிக்ஸர் மழை பொழிந்து கொல்கத்தாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!  - Seithipunal
Seithipunal


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்த போட்டியில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

 ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றது. தொடக்க வீரர் லின் மூன்று பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். கில் 14 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். நிதின் ராணா 21 ரன்களில் அவுட் ஆகினர். அதற்கடுத்து வந்த  சுனில் நரைன் 11 ரன்களில் ரன் அவுட்டானார்.

யாருமே நிலைக்காத நிலையில்  ஒரு முனையில் நிதானமாக ஆடி வந்த தினேஷ் கார்த்திக் 20 பந்து வரை நிதானமாக இருந்த நிலையில் அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்தார். சிக்ஸர்களும் பவுண்டரிகளாக விளாசுகிறார் தினேஷ் கார்த்திக். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97 ரன்களை குவித்துள்ளார். அவர் 7 பவுண்டரிகளையும், 9 சிக்சர்களையும் விளாசியுள்ளார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வருண் ஆரோன் நான்கு ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அந்த அணியின் ஸ்ரேயாஸ் கோபால். ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சினை கொல்கத்தா வீரர்கள் சிதறடித்தார்கள். 

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கவுள்ளது. தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் தன்னுடைய முதல் சதத்தை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 5 தோல்வி பெற்ற கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி வெற்றி பெறுமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Karthik scored unbeaten 97 against rajasthan royals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->