உண்மையான வீர தமிழச்சி! உலக அளவில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்க மங்கை!  - Seithipunal
Seithipunal


சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த பவானி தேவி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டிகள், இந்த மாதம் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் அண்மைக்காலமாக வாள்ச்சண்டைப் போட்டியில் சர்வதேச அணியில் பல சாதனைகளை புரிந்து வந்த சென்னையைச் சேர்ந்த பவானி தேவி கலந்து கொண்டார். 

இவர் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலகக் கோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க சுற்றுகளில் வெற்றிபெற்ற பவானி தேவி அரையிறுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கேட்ரியோனா தாம்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை எமிலி ரூவாக்சுடன் மோதினர். மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியில் 15-12 புள்ளிகள் என்ற கணக்கில் பவானி தேவி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai girl bavani sevi won gold in senior common wealth game


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->