இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று வீரர்களை நீக்கி பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடர்கள் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக பிரிதிவி ஷா பங்கேற்க இருந்தது. ஆனால் அவர் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா லெவன் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தின்போது, பீல்டிங் செய்யும் பொது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் செய்து பார்க்கும்போது அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக முரளி விஜய் களம் இறக்கப்பட்டார். தற்போது ப்ரிதிவி ஷா நலமாக உள்ளதாக தகவல் வந்ததையடுத்து அவர் இரண்டாவது போட்டில்யில் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முழுமையாக குணமடைந்தவுடன் அவர் களத்தில் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய்க்கும், கே.எல்.ராகுலுக்கும் இரண்டாவது போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை பெர்த்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின்  ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது போட்டிக்கான 13 பேர் அடங்கிய பட்டியலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் அடங்கிய பட்டியல்: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்க்ய ரகானே, ஹனுமா விஹாரி, ரிசப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ்.

முன்னதாக, காயம் காரணமாக இளம் வீரர் பிரிதிவி ஷா முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI to announce removal of three players in second Test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->