எலான் மஸ்குக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள்.. உலக அளவில் ட்ரெண்டாகும் #RIPTwitter.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ட்விட்டர் நிறுவன ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்த தலைமை அலுவலகங்களை மூடியது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்த வகையில் ட்விட்டர் பயனாளர்களுக்கான விதிமுறைகளை தற்பொழுது மாற்றி அமைத்துள்ளார். இனி வெரிபைட் பயனாளர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களையும், வெரிபை செய்யாத பயனாளர்கள் 1000 ட்விட்களையும், ட்விட்டரில் புதிதாக இணையும் பயனாளர்கள் 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளாகவும், ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து அதிக அளவிற்கு டேட்டாக்களை எடுப்பதை விரும்பவில்லை எனவும் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். மேலும் டேட்டாக்களை எடுத்து அதை வேறு இடங்களில் பயன்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் இந்த அறிவிப்புக்கு ட்விட்டர் பயனாளர்கள் ட்விட்டர் நிறுவனம் செத்து விட்டது என #RIPTwitter என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேகில் டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது எலான் மாஸ்க் வைலின் வாசிப்பது போன்றும், எலான் மஸ்க் மிகப்பெரிய முட்டாளாக இருக்கிறார். ஆனால் அவர் உலகத்தை தான் அறிவாளி என்று காட்டி ஏமாற்றிவிட்டார் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். #RIPTwitter என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RIPTwitter trending in Twitter against Elon musk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->