போதைப் பொருள் கடத்தல்; விசிக‌ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையால் கைப்பற்றப்பட்ட சுமார் 2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விசிக நிர்வாகி முகமது சலீமை அக்கட்சியில் இருந்து நீக்குவதாக விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் சென்னை மாவட்டம் மைய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்புக்கு ஊர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார்.

அவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். போதைப் பொருள் களத்தில் வழக்கில் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் திமுக மாவட்ட செயலாளர் ஒருவருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் தம்பி ஒருவருக்கும் தேசிய போதை பொருள் தடுப்பு முகமை சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Muhammad Salim remove from party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->