பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய மிக உயரிய விருது.! காரணம் இதுதான்.!! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயரிய விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்  உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் மோடியின்  முயற்சிகளை ஐக்கிய அரபு அரசு பாராட்டியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், மிக உயர்ந்த விருதான சயித் பதக்கம் விருதை இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி  ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார். இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை  பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uae honours award for modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->