ஆகஸ்ட் -15 க்கு பின் ஆட்சி மாற்றம்.! நாங்கள் கைக்காட்டும் ஆட்சிதான் இனி மத்தியில்.!! டிடிவி தினகரன் அதிரடி.!!! - Seithipunal
Seithipunal


இனி எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று அம்மா மக்கள் முன்னேற்றறக் கழக துணைப் பொதுச் செயலாளரும் ஆா.கே.நகர்  சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான டி.டி.வி.தினகரன். தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், அரூரில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அதில், ''அரூர் வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை விவசாயிகள், பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை, விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் எந்த திட்டமும், இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த, காவல் துறையினரை வைத்து, விவசாயிகளை மிரட்டி மத்திய, மாநில அரசுகள் அராஜக போக்கில் செயல்பட்டுவருகின்றன.

இந்த திட்டத்தை, தமிழக அமைச்சாகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினாகள் அனைவரும் பொதுமக்களை நேரில் சந்தித்து, விவசாயிகளிடம் கலந்து பேசி செயல்படுத்தாமல், மக்களை அச்சுறுத்துவது ஏன்?. மக்கள் விரும்பாத எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு மாற்றாக சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை-கன்னியாகுமரி செல்லும் சாலைகளை விரிவுபடுத்தி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.

வரும் மக்களவைத் தோதலில் 40 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும். அமமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினாகளின் வழக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புகள் உண்டு. இந்த தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரும்.'' என தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DINAKARAN OPEN TALK ABOUT PARLIAMENT ELECTION


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->