தினகரனுக்கு குக்கர் சின்னம்.! ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்.!!  - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ''இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இல்லை வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்று, ஓபிஎஸ் இபிஎஸ் க்கு இரட்டை இலையை வழங்கியது சரி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன், சசிகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், 

இந்நிலையில், இந்த வழக்கை சற்றுமுன் விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், இரட்டை இலை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25ம் தேதிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DINAKARAN COOKER SIMPLE CASE SC NEW ORDER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->