விழுப்புரத்தில் பரபரப்பு! குவிக்கப்பட்ட போலீசார்! பிடிவாதம் பிடித்த குடிமக்கள்! வண்டிகட்டி ஓடவிட்ட இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ஆனத்தூர் கிராமத்தில் அரசு மதுபானக்கடை திறக்க அனுமதிக்கக் கோரி ஆனத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கையொப்பமிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த (24-12-2018) அன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் சுமார் 12 ஆண்டுகளாக ஆனத்தூர் கிராமத்தில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வந்ததாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கடைகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், தற்சமயம் ஆனத்தூர் பகுதியில் மதுபான கடை இல்லாத காரணத்தினால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நோக்கியும், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி நோக்கியும் சுமார் 12 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளதாகவும், அங்கிருந்து மது அருந்தி விட்டு பயணம் செய்வதால் இருசக்கர வாகன விபத்துகளும் பொருள் இழப்பும் ஏற்படுவதாக மக்கள் கூறியுள்ளனர். 

ஆகவே, ஆனத்தூர் கிராமத்தில் மதுபானக்கடை திறக்கும் பட்சத்தில் பொருள் இழப்பும், வாகன விபத்து தவிர்க்கப்படும் என்று தெரிவித்து மதுபான கடையை திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று கடை திறக்கப்பட்டது.  இதனை கண்டித்து கடையை முற்றுகையிட்டனர். 

டாஸ்மாக் கடை திறக்க  எதிர்ப்பு தெரிவித்து கடையை இழுத்து முடி போராட்டம் நடத்தினார்கள். பொதுமக்கள் போலீசார் இடையே 1மணி நேரம் கடும் போராட்டம் நடைபெற்ற நிலையில்  SP உத்தரவின் பேரில் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.  மது பாட்டில்களை டாடா ஏசியில் ஏற்றி சென்றனர். கடை மூடப்பட்ட சந்தோஷத்தில் அப்பகுதி மக்கள் துள்ளி குதித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamac shop closed for people protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->