பாராளுமன்றத்தில் பரபரப்பு.! போராட்டத்தில் களமிறங்கிய சோனியாகாந்தி.!!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, மத்திய அரசு முறையாக விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி உள்பட அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பொது,  கட்சி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உலகின் மிகப்பெரிய ஊழல் ரபேல் போர் விமானம் வாங்கும் நடப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விடயம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கேட்டபோது, இது மிகவும் ரகசியமான ஒப்பந்தம் என்பதால் இது குறித்து விளக்கம் அளிக்க முடியாது, என்று பொய் கூறியதாக காங்கிரஸ் கட்சி என தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் திடீரென போராட்டத்தில் இறங்கினர். அப்போது, ரபேல் போர் விமானங்கள் குறித்து மத்திய அரசும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விவசாய கடனை உடனே ரத்து செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SONIYA GANDHI PROTEST IN PARLIAMENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->