தமிழக முதல்வர் தான் குற்றவாளி.! வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு.!!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், அவர் உருவாக்கிய வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்களும், அந்த காணொலியில் இடம்பெற்று உள்ளது. மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், அதிமுகவின் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரிடமும் வாங்கப்பட்ட மன்னிப்பு கடிதங்கள் இருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாட்டில் கொள்ளை நடந்த போது அதில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்? என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப் படத்தில் காட்டியுள்ளார். அந்த முக்கிய அரசியல்வாதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற தகவலும் வேகமாக பரவி வந்தது. 

இந்நிலையில், கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிகையுடன் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள்,  மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு செய்த பின், வீடியோவை வெளியிட்ட சாம் மேத்யூஸ், மனோஜ், சயான் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE CASE FILING IN KODANADU ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->