அரசியல் சென்டிமென்ட்.. களத்தில் குதிக்கும் ஸ்டாலின், ஈபிஎஸ்.!! எங்கும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வரும் மார்ச் 22-ம் தேதியும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரும் மார்ச் 24 -ம் தேதியும் திருச்சியில் தொடங்க உள்ளனர் .திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், இருவரும் இங்கு பிரச்சாரத்தை தொடங்குவதால் யாருக்கு திருப்புமுனையே தரப்போவது என்று கேள்வியை எழுந்துள்ளது.

திமுகவுக்கு திரும்பமுனை கொடுத்த திருச்சி:

1. 1956 -ல் திமுக முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டு 1957ல் நடைபெற்ற சட்டப்பேரவையில் திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2. அதனைத் தொடர்ந்து 1962-ல் நடந்த மாநாட்டிற்கு பிறகு 50 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.

3. அதன் பின் 1967-ல் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு திமுக அமோக வெற்றி பெற்று முதன் முறையாக தமிழகத்தில் ஆட்சி பிடித்தது.

4. 1971-ல் மறைந்த திமுக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது.

திருச்சியில் திமுக நடத்திய 11 மாநாடுகளில் 5 திருச்சியில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது என குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுக்கு திருப்பு முனையை கொடுத்த திருச்சி:

1. 1977-ல் எம்ஜிஆர் தலைமையில் தொடங்கிய முதல் மாநாட்டு திருச்சி காட்டூரில் நடத்தி அதிமுக ஆட்சி அரையனை ஏறியது.

2.2011-ல் ஜெயலலிதா தலைமையில் திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் பிரம்மாண்ட பொது கூட்டம் நடத்தப்பட்டு அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இதனால் திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்தியதை தொடர்ந்து திராவிட கட்சிகள் மட்டுமின்றி பிற கட்சியினரும் திருச்சியில் தங்களது மாநாடுகள், கூட்டங்களை நடத்த தொடங்கின.

எதிர்வரும் மக்களவைப் போவது தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள 2 பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளதால் எந்த கட்சிக்கு திருப்புமுனையை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுதுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin EPS starts election campaign in Trichy politics sentiment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->