திரும்ப பேசினால்.. "தொகுதி உள்ளே நுழைய முடியாது" .. A.C.S-க்கு K.C வீரமணி எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலிலும் பாஜக சின்னத்தில் வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக கடந்த தேர்தலில் அதிமுக முதுகில் குத்திவிட்டதாக விமர்சனம் செய்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுக வேட்பாளர் பசுபதி ஆதரித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் கே‌.சி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது "வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தலைமை இறங்கி இருக்கும் ஏ.சி சண்முகம் அதிமுகவினரும் நானும் தான் காரணம் என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவருக்கு எச்சரிக்கையாக இந்த செய்தியை விடுக்க நினைக்கிறோம். நீங்கள் பிரச்சாரத்திற்கு இந்த பகுதியில் வரும்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். தொண்டன் மீது வீண்பழி சுமத்துவது, என் மீது வீண்பழி சுமத்துவது இதையெல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஏசி சண்முகம் வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றார். இனியும் இது போன்ற வீண்பழி பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டால் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ய நுழைய முடியாத அளவுக்கு எங்களுடைய கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும். இனி இது பன்ற பிரச்சாரம் செய்தால் நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்" என ஏசி சண்முகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KCveeramani waring to BJP candidate ACshanmugam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->