குடுமி எதுக்கா? அப்ப குல்லா எதுக்கு? ஹிஜாப் எதுக்கு? பெண்கள் ஆண்களோடு சேர்ந்து நமாஸ் பண்ணலாமா? பெண் இமாம் ஆகலாமா? கேட்பீரா திராவிடயாஸ்?! - Seithipunal
Seithipunal


அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சுந்தரவல்லி என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில், "அண்ணாமலை ஒரு பார்ப்பன அடியாள் என்பதை உறுதி செய்யும் நிழல் படம்.

உச்சி குடுமி பார்ப்பனர்களோடு உண்டக்கட்டி சோறு... 'பிச்சை சோறு அண்ணாமலை' என்று, கடுமையாக அண்ணாமலையையும், குறிப்பிட்ட சமூகத்தின் சிறார்களையும் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வழக்கத்தையும், சிறார்களை அசிங்கப்படுத்துவிதமாக சுந்தவல்லியின் பதிவு இருந்ததால் பலரும் கண்டனக்குரல் எழுப்பினர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், "எவ்வளவு ஜாதி வெறி இந்தம்மாவுக்கு. தமிழிசை மேடம், விஜயேந்திர, சரஸ்வதி பொய் சர்ச்சை போல இங்கு எதுவும் உருட்ட முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல். 

உண்மையான சமூக நீதியை பார்த்து கதறும் போலி பகுத்தறிவுவாதிக்கு சமத்துவ சோறு செரிக்காதுதான்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

இதற்க்கு சுந்தரவல்லி பொறுமை இழந்து, "சொந்தச் சாதிய கக்கத்தில் இடுக்கிக்கிட்டு சொந்த சாதி பெருமை பேசிட்டு அலைகிற  அரைவேக்காட்டு முட்டாள்களுக்கு  இது புரியாது.

யாரும் யார் கூடயும் சாப்பிடலாம். ஆனா அத சமத்துவம்னு போஸ்டர் அடிச்சா மூஞ்சிய உடைப்பேன்" என்று பதிவிட, அதற்க்கு கஸ்தூரி, "யாரும் யாருடனும் சாப்பிடலாம். அதை அடிமை அடியாள் என்று பேசும், அப்பழுக்கில்லாத குழந்தைகளை கேலி செய்யும் அசிங்கம் புடிச்ச ஜாதி வெறியரை...

விடு. அங்கு உடைக்க என்ன மிச்சமிருக்கு. 
குடுமியை இழிவுப்படுத்தும் குப்பைகள் நீங்கள். 
குல்லா குரிசை குலம் எல்லாவற்றையும் மதிப்பவர் நாங்கள்." என்று பதில் கொடுத்துள்ளார்.

மேலும், பெரியரியவாதி ஒருவர் , "அப்பழுக்கில்லாத குழந்தைக்கு ஜாதி அடையாளமான உச்சிக்குடுமி எதுக்கு?

உங்காத்துப் பெண் குழந்தைக்கும் உச்சிக்குடுமி வைக்கலாமே? அப்படியே வேதப்பாட சாலையிலும் சேர்த்து விடலாமே??" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, "குடுமி என்பது ஜாதி அடையாளம் இல்லை. புரோகிதத்தின் புனித அடையாளம். வேதம் படிப்பவர் வைத்துக்கொள்வது. 

எங்க பாரம்பரியம் இருக்கட்டும். முதல்ல உங்க வீட்டுக்குள்ள பாருங்க.  குல்லா எதுக்கு? ஹிஜாப் எதுக்கு? பெண்கள் ஆண்களோடு சேர்ந்து நமாஸ் பண்ணலாமா? பெண் இமாம் ஆகலாமா? கேட்பீரா திராவிடயாஸ்?" என்று நடிகை கஸ்தூரி கேள்விக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasturi vs sundravalli twitter post issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->