சாதி இல்லைனு ஊருக்கு உபதேசம் செய்யுறவன விடவே கூடாது! நடிகை கஸ்தூரி கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal



சேலம் : திருமலைகிரி கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை, ஊர் மத்தியில் நிற்க வைத்த வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கம் என்பவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டியலின இளைஞரை தாக்க முயன்றுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கத்தை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட னைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "இதான் இவங்க நடத்துற திராவிடமாடல்  அறநிலையத்துறை லட்சணம். கலெக்ஷன், எலெக்ஷன் ரெண்டுக்குதான் கோயில் பக்கமே இந்து அறநிலைத்துறை வருவாங்க. 

ஆனா கடவுள் இல்லைனு சொல்றவங்க ரெகுலர். ஆ சத்ருசம்ஹார யாகம் பண்ணுவாங்க. ஜாதி பாக்குறவன மன்னிக்கலாம், ஜாதி இல்லைனு ஊருக்கு உபதேசம் செய்யுறவன விடவே கூடாது.

இந்த கொடுமை நடந்து 10 நாளு ஆகுதாம். திமுக விசிக லாம் கண்டுக்கவேயில்ல. எந்த முன்களப்பு மீடியாவும் செய்தி போடல. 

ஏன்னா பார்ப்பனீயம், பானிபூரின்னு  யாரையும் திட்ட முடியல. இன்னிக்கு வீடியோ வைரல் ஆனதும் திமுக சம்பந்தப்பட்டவரை 'தற்காலிகமாக'  நீக்கி சமூக நீதியை  காப்பாத்திட்டாங்க." என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasturi say about thirumalaikiri temple issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->