முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை சேர்ந்துள்ள தொகையின் மதிப்பு வெளியீடு!! - Seithipunal
Seithipunal


கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது என்று தற்போது தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கஜா புயலால்  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்துளளது. கஜா புயலுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 

இதனால், அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை. அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்கள் புகார் எழுப்புகின்றனர். 

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே,  நிவாரண நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில், கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaja relief Amount In Tamilnadu Cm ReliefFund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->