உடைகிறதா திமுக கூட்டணி.? இன்றே முடிவு.. வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணி இளங்கம் வகிக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளின் தொகுதி பங்கீடு வந்தது பிரதான கட்சிகளான காங்கிரஸ் மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து  வருகிறது.

இந்த நிலையில் மதிமுக விசிக உடன் திமுக தொகுதி பங்கிட்டு குழு இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுக நிர்வாகிகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் அதில் ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீதைக்கு திமுகவுடன் கேட்டுப் பெறவும் மக்களவைத் தேர்தலில் தனிச்சனத்தில் போட்டியிடுவது எனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று நடைபெறும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் திமுக மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு நிர்பந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் திமுக தரப்பு புதுச்சேரி உட்பட எட்டு தொகுதிகளை ஒதுக்க மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

அதேபோன்று திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக கருதப்படும் விடுதலை சிறுத்தைகள் 2 தனி தொகுதி மற்றும் ஒரு பொதுத் தொகுதி என 3 தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அக்கட்சியுடன் இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ், விசிக, மதிமுக உடனே அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக தரப்பு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்க வில்லை. இதனால் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுமா? அல்லது பேச்சுவார்த்தை இன்றி கூட்டணி முறியுமா? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info DMK alliance discussion dropped with vck


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->