8 ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயமா? மத்திய அமைச்சர் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது, இந்திய முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை நியமித்தது.

இந்த குழு தனது ஆய்வு பணியை நடத்தி வந்த நிலையில், மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இங்தக ஆய்வுக்கான முழு அறிக்கையை சமர்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும், இந்த ஆய்வு அறிக்கையில், ''நாடுமுழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை தொடக்க நிலையில் இருந்தே கற்றுத் தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாக நிலையில், 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என வெளியான தகவலுக்கு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், 8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HINDI MUST IN SCHOOL CENTRAL MINISTER PRAKASH JAVEDEKAR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->