கொடநாடு வழக்கு || சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா? மு.க ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் "கொடநாடு சொன்னாலே கொலை நடக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படுகிறது என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. 

எனக்குத் தெரிந்த உண்மையை சொல்ல தயார் என சிபிசிஐடி விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தால் நம்பலாம். எல்லாமே சட்டப்படி நடக்கிறது விரைவில் அனைத்தும் சட்டப்படி நடக்கும் என முரசொலியின் தலையங்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "நான் சட்டமன்றத்தில் கேட்கும் போதே முதலமைச்சர் சொல்லி இருக்கலாமே.? அப்போது இது குறித்து நான் பலமுறை கேள்வி ஏட்டிய போது அப்போது ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள. வெளியே ஏன் வீர வசனம் பேசுகிறார்கள்? முதலமைச்சராக ஒருவர் இருக்கும் போது தமிழ்நாட்டில் பல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

திமுக ஆட்சியில் இருக்கும்போது எவ்வளவு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன, எத்தனை பேர் இறந்துள்ளனர். அதெல்லாம் நாங்க திருப்பி கொண்டு வர மாட்டோமா? அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சம்பவம் நடைபெற்றது மையமாக வைத்து ஏன் பேசுகிறார்கள்? வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

ஏற்கனவே ஒருவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நான் செய்தியாளர்கள் சந்திப்பிலும் சட்டமன்றத்திலும் பேசியதை ஏன் அந்த நாளேடு குறிப்பிடவில்லை? எல்லாம் குறிப்பிடுபவர்கள் அதையும் குறிப்பிட வேண்டும் அல்லவா. அந்த சம்பவம் நடைபெற்ற உடன் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. அவர்களை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. வழக்கு நடைபெற்றதும் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது.

அந்த குற்றவாளிகள் மீதான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்காக ஆஜர் ஆனது திமுக வழக்கறிஞர். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாடியுள்ளார். இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாராராக இருந்தது திமுகவைச் சேர்ந்தவர். 

அதனால் தான் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரணை செய்யக்கூடாது? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க. நீங்கதான் சந்தேகம் இருக்குதுன்னு சொல்றீங்க இல்ல சிபிஐ விசாரணைக்கு ஒப்படைங்க. மற்றொன்று ஜாமீன் காரருக்கும் கொலை குற்றவாளிக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை குற்றவாளிகள் ஏற்கனவே கேரள மாநிலத்தில் கொலை கொள்ளை வழிப்பறி ஆள் கடத்தல் போதைப் பொருள் கடத்தல் போன்ற கொடும் குற்றங்களை புரிந்துள்ளனர். 

அவரை கொடுங் குற்றம் புரிந்து அந்த வழக்கு கேரளாவில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் போதும் குற்றவாளிகளுக்கு திமுக வழக்கில் ஆஜராகி வாதாட என்ன காரணம்? திமுகவை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஜாமீன் தாரராக இருப்பதற்கு என்ன தொடர்பு உள்ளது? இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களும் சாட்சிகளும் விசாரணை நடத்தப்பட்டு கொரோனா காரணத்தால் வழக்கு நிலுவையில் இருந்தது. 

அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 90 சதவீதம் வழக்கு விசாரணை முடிவுற்றதாக தகவல் வெளியானது. அவ்வாறு இருக்கும்போது ஏன் மீண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர். திமுக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட காவல்துறை விசாரணை அறிக்கை மீது என்ன சந்தேகம்? ஐஜி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு வெறும் 10 சதவீதம் மட்டுமே விசாரணை எவ்வளவு காலம் ஆகும்? 

எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாத காரணத்தால் திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற செய்திகளை அடிக்கடி வெளிவிடுகின்றனர். இதுகுறித்து நீங்களும் பலமுறை கேள்வி கேட்கிறீர்கள் நானும் பலமுறை பதில் சொல்லிவிட்டேன். சட்டமன்றத்திலும் நேருக்கு நேர் முதலமைச்சரை கேட்டு விட்டேன். இப்படி சொல்பவர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டும். இந்த ஆட்சியில் ஒரு கொலை குற்றமடை பெற்றால் அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்வாரா? ஏன் ஜாமீன் தாரரை விசாரணைக்கு அழைக்கவில்லை?" என திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS challenged MKStalin ready to order CBI probe into Kodanadu case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->