சுட்டெரிக்கும் வெயில்... ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. 

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்றும் முதல் 1 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கையும் வருகின்ற 30 ஆம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதன்படி மே இரண்டாம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் எனவும், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெயிலில் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈரோட்டில் அதிகபட்சமாக 108.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக வெப்ப அலை வீச கூடும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha and West Bengal Red alert


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->