ஊழல்/லஞ்சம் தலை விரித்தாடுகின்றது - தமிழகத்தில் அரசியல் சட்டம் 356ன் படி ஆட்சி கலைக்கபட்டது..! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சி கலைப்பு இதே தினத்தில் (31/01/1976)  1976 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருக்கும் போது நடந்தேறியது.

அப்போது மத்தியில் இந்திரா பிரதமராக இருந்தார். இக்கலைப்புக்கு முன் மொழிந்தவர் மறைந்த மக்கள் திலகம் எ.ம்.ஜி.ஆர்.

தி.மு.க வின் ஆட்சியில் ஊழல்/லஞ்சம் தலை விரித்தாடுகின்றது என்ற புகாரின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டம் 356 ஆம் பிரிவு உபயோகித்து தி.மு.க வின் ஆட்சி கலைக்கபட்டது.

தி.மு.க ஆட்சி 15/3/1971 தொடக்கம் 31/01/1976 வரை நிடித்தது. அதன் பின்னர் ஆட்சி கலைப்பால் ஜானாதிபதி ஆட்சி 30/06/1977 வரை நிடித்தது. அதன் பின்பு நடந்த தேர்தலின் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.

இதன் பின்பு சுமார் 12 ஆண்டுகாலம் தி.மு.க வால் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆர் ரின் மறைவுக்கு பின் 1989 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க அரியனை எறியது. அதுவும் அதிக காலம் நிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் புகார் தவிந்து இன்னுமொருகாரணமும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் உண்டு. அப்போது மத்தியில் இந்திரா பொது தேர்தலை தவிர்ப்பதற்காக 26/06/1975 இல் அவரசகால நிலையை பிரகனப்படுத்தி இருந்தார்.

தனக்கு ஒத்துழையாத தலைவர்களை நாட்டின் பாதுகாப்பை காராணம் காட்டி சிறைப்படுத்தினார், அத்துடன் சிலரின் ஆட்சியும் கலைக்கபட்டது.

தி.மு.க அவரசகால நிலையை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்த தலையிடியை போக்குவதற்கு இந்திரா எம்.ஜி.ஆர்r இன் ஒரு கருவியாக பயன் படுத்தினார். இதைப்போலவே இந்திராவால் குஜராத் ஆட்சியும் கலைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk rule demolish on same day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->