திமுக எம்எல்ஏ.,வுக்கு சாதி வெறியதற்கு? சிறப்பான சம்பவம் செய்த தேவேந்திர குல வேளாளர்கள்!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. தொட்டியம் ஒன்றிய பெருந்தலைவராக புனிதாராணி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தொட்டியம் ஒன்றிய பெருந்தலைவர் புனிதாராணி பதவி நீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இதற்க்கு புனிதாராணி சமூகமான தேவேந்திர குல வேளாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும், இது குறித்த சுவரொட்டிகளையும் தொட்டியம் பகுதியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஒட்டி உள்ளனர். அந்த சுவரொட்டியில், சட்டமன்ற உறுப்பினருக்கு, சாதி வெறியதற்கு? திராவிட தலைவர் தளபதி அவர்களின் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு. காடுவெட்டி.தியாகராஜன் அவர்களின் தூண்டுதலின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தொட்டியம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.புனிதாராணி அவர்களின் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை மீண்டும் வழங்கக்கோரி, முசிறி தாப்பேட்டை பிரிவு ரவுண்டானா அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தேவேந்திரகுல வேளாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை, இவர் பறையர், இவர் எஸ்சி, நாங்கள் தான் சமூக நீதி கொடுத்தோம், பெரியார் போட்ட பிச்சையில் தான் இன்று சாலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து செல்வதாக தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும், குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிற்க வைத்து அமைச்சர் கேகேஎஸ்ஆர் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது திமுக எம்எல்ஏ.,வின் சாதி வெறியால் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒன்றிய பெருந்தலைவர் பதிவி  நீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA kaduvetti Thiyagarajan Issue Thottiyam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->