திமுக ஆட்சியின் கெட்ட பெயரை திசை திருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்- எஸ்.பி.வேலுமணி - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய கெட்ட பெயர் உள்ளது. அதை திசை திருப்ப என் மீதும், தங்கமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் புதிய வழக்கு போட திமுக அரசு திட்டமிட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும், திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியயாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி “ அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார்.

7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் உள்ளார்கள். அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில் தான் அனைவரும் அங்கு சென்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக 3 முறை எனது வீட்டில் சோதனை நடத்தி தொந்தரவு செய்தார்கள். பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

தற்போது திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய கெட்ட பெயர் உள்ளது. அதை திசை திருப்புவதற்காக முன்னாள் அதிமுக அமைச்சர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள். முதலமைச்சர் நாட்டில் என்ன நடக்கிறது என கவனிப்பதில்லை.

அனைத்து துறைகளிலும் கடுமையான ஊழல் நடக்கிறது. என் மீதும், தங்கமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் புதிய வழக்கு போட திட்டமிடப்பட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணமும் கூட. ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா, இல்லையா என்பது மருத்துவர்களுக்கு தான் தெரியும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது இன்று காலை அறுவை சிகிச்சை என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள் எனத் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK is planning to arrest former ADMK ministers to deflect the bad name of government- SP Velumani


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->