திமுக கூட்டணி போட்டியிட போகும் தொகுதி பட்டியல்.!!  - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் வாக்கு நடைபெற உள்ளது. மேலும் அன்றே தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 

இந்த மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில்,  
திமுகவிற்கு 20 தொகுதிகளும், 
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளும், 
மதிமுக 1+1 தொகுதிகளும்,
விசிக 2 தொகுதிகளும், 
இந்திய கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், 
மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், 
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியும்,
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 1 தொகுதியும், 
இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்நிலையில், திமுக உள்ளிட்ட கூட்டணி காட்சிகள் போட்டியிடப்போகும் உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,.

திமுக போட்டியிடப்போகும் அந்த 20 தொகுதிகள்:

வடசென்னை, தென்சென்னை, கோவை, பொள்ளாட்சி, நீலகிரி, மத்திய சென்னை. வேலூர், சேலம், அரக்கோணம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 


காங்கிரஸ் போட்டியிடப்போகும் அந்த 10 தொகுதிகள்:

புதுச்சேரி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரம்புதூர், மைலாடுதுரை, சிவகங்கை, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆரணி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

விசிக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

மார்க்சிஸ்ட் மதுரை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

முஸ்லீம் லீக் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

ஐ.ஜே.கே கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. 
 
மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and alliance party volume list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->