வாழ்க்கை ஒரு வட்டம்.! முக அழகிரியின் வீட்டு படியேறும் திமுக.! பதிலடி கொடுக்காமல்.. பக்குவமாய் பதிலளித்த அழகிரி.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு தனது ஆதரவு என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், திமுக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பின், திமுகவில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட முக அழகிரி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைக்க அழைக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் திமுகவின் தலைவராக முக அழகிரி வரவேண்டும் என்று மதுரையை சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் ஏகோபித்த ஆதரவுடன் பதவியேற்றார்.

பதவி ஏற்ற பின்பு முக அழகிரி அவர்கள் திமுகவில் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அது அனைத்துமே தோல்வியில் முடிந்தது என்று சொல்வதை விட, அவர் அவமான படுத்தப்பட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

அழகிரியை திமுகவில் இணைத்து கொள்ளலாமே... என்று எதிர்க்கட்சிகள் பரிதாபம் படும் அளவிற்கு திமுகவில் அழகிரி இணைவதற்கு எடுத்த போராட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. 

இந்த நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு திமுக ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதில் மதுரை தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அந்த தொகுதியில் திமுக நின்றால், நம்மை (திமுக-ஸ்டாலின்) பழிவாங்க அழகிரி எதாவது செய்து தோல்வியடைய வைத்து விடுவார் என்ற அச்சம் தான் காரணம்.

இந்த நிலையில், மதுரை தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவில் தன்னை இணைத்து கொள்ளுமாறு அவ்வளவு போராட்டம் செய்தும் அழகிரியை திமுகவில் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்ற முடிவில் இருந்த திமுகவின் நிலை, இன்று அழகிரியின் ஆதரவுக்கு, அவரின் வீட்டு படியேற வைத்துள்ளதாக உள்ளதாக விமர்சனங்கள் பறந்தன. 

இதற்க்கு முக அழகிரி தக்க பதிலடி கொடுப்பர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி அவர்களிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அழகிரி, '' மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை. அவர் என்னைச் சந்தித்து ஆதரவு கேட்டால், பின்னர் முடிவெடுப்பேன்'' என்று பக்குவமாக தனது பதிலை கொடுத்து சென்றுள்ளார். இது பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ALLIANCE CANDIDATE MEET MK AZHAGIRI ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->