முதல்வர் - ராகுல் காந்தி இணையும் சூறாவளி பிரசாரம்... விரையில் சுற்றுப்பயன விவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை, சத்தியமூர்த்தி பவனின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

பாராளுமன்ற மாநிலங்களவை பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பொழுது எல். முருகனை நீலகிரி வேட்பாளராக எதற்காக அறிவித்தீர்கள்.

ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தென் சென்னையில் வேட்பாளராக அறிவித்தது எதற்காக. 

தென் சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெயசங்கரை ஏன் நிறுத்தவில்லை. ஜெய்சங்கருக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி. பட்டியலினத்தில் பிறந்த எல். முருகனுக்கும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சௌந்தரராஜன் ஒரு நீதியா? 

இதுதான் பா. ஜனதாவின் பாசிச முகம். நாங்கள் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிமுக்கு தொகுதி ஒதுக்க முயற்சித்தோம். நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் முஸ்லிம்க்கு ஒதுக்க முடியவில்லை. 

அதனால் கிறிஸ்துவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ராமநாதபுரத்தில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எங்கள் வேட்பாளர் தான். 

அடுத்த வரும் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளனர். விரைவில் சுற்றுப்பயன விவரத்தை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm Stalin Rahul Gandhi campaign together


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->