பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடுவது ஏன்? எதிர்க்கட்சிகளை பங்கம் செய்த பாஜக.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த மே 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டு மே 23ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அதில் பாஜகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்தனர்.

மேலும் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 13, 14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூருவில் ஜூலை 13, 14ம் தேதிகளில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை பிரச்சினையால் பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திமுக தயக்கம் காட்டியது. இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக தரப்பு கலாய்த்து வருகிறது. தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் ரத்து. பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடுவது ஏன்?" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP criticized opposition parties meeting cancel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->