மு.க ஸ்டாலினுக்கு அந்த யோகிதை கிடையாது.. போட்டு தாக்கிய பாஜக வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "திமுக வேட்பாளர் ராசாவுக்கு செல்லும் இடமெல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. 

கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராசா தனது வாக்காளர் அடையாள அட்டையை நீலகிரிக்கு மாற்ற வல்லை. ஆ ராசா சமுதாயத்தை அவமானப்படுத்துகிறார். 

தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் என்னை சுற்றி சுற்றி வருகின்றனர். ஆனால் திமுக வேட்பாளர் ராசாவை கண்டு கொள்வதில்லை. திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேசவே யோகிதை கிடையாது.

அருந்ததியருக்கென இருக்கும் ஒரே தொகுதி நீலகிரி மட்டும்தான் அங்கு கூட ஒரு அருந்ததியர் வேட்பாளரை நிற்க வைக்கவில்லை. 

இவர்கள் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மீகம் மீது நம்பிக்கை உள்ள மக்களை திமுகவினர் அவமதிக்கின்றனர். இது 2ஜிக்கும் மோடிஜிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என எல்.முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidate lmurugan criticized mkStalin on social justice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->